மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட கன்னன்குடா மகாவித்தியாலயத்தில் முதல் முறையாக சாரணர் இயக்கத்தை உருவாக்கி அவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா நேற்று வெள்ளிக்கிழமை காலை பாடசாலை அதிபர் தி.புலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றது.
சாரண ஆசிரியர் கு.பிரபாகரன் ஏற்பாட்டில் இடம்பெற்ற இச் சின்னம் சூட்டும் விழாவில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர்(நிருவாகம்)ஞா.ஸ்ரீநேசன் சாரணர் மாவட்ட உதவி ஆணையாளர் வ.சுப்பிரமணியம்,மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத் தலைவத் பொ.மேகவண்ணன்,கன்னன்குடா கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபைத் தலைவர் க.விமலநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.