சேதமடைந்த நிலையில் காணப்படும் செங்கலடி பிரதேச செயலக வீதி

(லிகிதரன்)

செங்கலடி பிரதேசம் அபிவிருத்தியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தற்போதைய கால கட்டத்தில் செங்கலடி பிரதேச செயலக வீதி இன்னும் கவனிப்பாரற்ற நிலையில் குன்றும் குழியுமாக காணப்படுவது வேதனையளிக்கின்றது.

இவ் வீதியிலே செங்கலடி பிரதேச செயலகம், தபால் நிலையம், சுகாதார வைத்திய அலுவலகம், சமுர்த்தி மகா சங்கம் என்பன அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களின் அன்றாட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் இவ் வீதியை உரிய முறையில் புனரமைத்துத் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பில் ஏறாவூர்பற்று பிரதேசசபையின் செயலாளர் திருமதி ஜோன்பிள்ளையிடம் கேட்டபோது,

இந்த வீதியின் புனரமைப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்தார்.