காத்தான்குடியில் ஹிறா பவுண்சேனினால் உதவித்திட்டங்கள்

(எம்.எஸ்.நூர்)

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா மற்றும் காத்தான்குடியிலுள்ள அறபுக்கல்லூரிகளுக்கு பிரதியமைச்சர் எம்.எல்.ஏஎ.ம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் இலங்கை ஹிறாபவுண்சேனினால் மின்விசிறிகள் மற்றும் உதவிகள் நேற்றிரவு(16.6.2013) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வைபவம் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை கட்டிடத்தில் நடைபெற்றது.

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக், மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் அப்துல்லா ஆலிம் றஹ்மானி ஹசரத், அதன் செயலாளர் எம்.ஜிப்ரி மதனீ, அதன் ஆயுட்காலத்தலைவர் மௌலவி ஐ.எல்.எம்.முஸ்த்தபா பஹ்ஜி காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி தலைவர் சட்டத்தரணி ஏ.எல்.அப்துல் ஜவாத் உட்பட உலமாக்கள் அதன் உறுப்பினர்கள் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரி, அல்மனார் அறிவியற் கல்லூரி, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம் என்பவற்றிற்கு இந்த மின்விசிறிகள் வழங்கப்பட்டதுடன் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கு இரண்டு இலட்சம் ரூபா நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.