மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்பின் பேரில் மாவட்ட சமுர்த்தி அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம்வியாழக்கிழமை மட்டக்களப்பு நகரிலுள்ள யார்ட் வீதி மற்றும் அதனையண்டிய பகுதிகள் சிரமதானம் செய்யப்பட்டனர்.
நகரை அழகுபடுத்தும் அபிவிருத்தி வேலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அதற்கு உறுதுணையாக அமையும் வண்ணம் இந்த சிரமதானம் மேற்கொள்ளப்படுவதாக மாவட்ட சமூர்த்தி பிரதிப் பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.
இன்றைய சிரமதான வேலைகளில் மாவட்ட சமூர்த்தி அலுவலக உத்தியோகத்தர்கள், மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுரத்திப் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
அதே நேரம் மட்டக்களப்பு மாநகர சபை யினரும் வாகன மற்றும் ஜேசீபி. வாகனங்கள், மற்றும் உபகரணங்களுடன் இந்த சிரமதானத்தில் இணைந்து கொண்டிருந்னர்.
கடந்த வியாழக்கிழமை மாவட்ட செயலகம் அமைச்துள்ள கோட்டையை அண்டிய பகுதிகள் சிரமதான அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன் தொடர்ச்சியாக இச் சிரமதானம் நடைபெறுவதாகவும் பிரதிப்பணிப்பாளர் பி.குணரெட்ணம் தெரிவித்தார்.