இதுவரை காலமும் பாடசாலையின் விடுதி வாயிலே பயன்படுத்தப்பட்டுவந்த நிலையில் பாடசாலைக்கான தனி நூலைவாயில் மற்றும் சுற்றுமதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் திறப்பு விழா இன்று காலை பாடசாலை அதிபர் அருட்செல்வி எம்.எலிசபெத் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மறை மாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
சிசிலியா தேசிய பாடசாலையின் பழைய மாணவர்களின் லண்டன் கிளையின் நிதியுதவியில் இந்த பாடசாலை சுற்றுமதில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்,மாணவர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.