15வயதின் கீழ் ஆண்கள் ( மேசைப்பந்து),15 வயதின் கீழ் பெண்கள் ( மேசைப்பந்து),19 வயதின் கீழ் ஆண்கள் ( மேசைப்பந்து),15 வயதின் கீழ் பெண்கள் ( சதுரங்கம் )ஆகிய போட்டிகளில் வெற்றி பெற்று மாகாண சம்பியன்களாக வெற்றிக் கிண்ணங்களை சுவீகரித்துத் கொண்டுள்ளது.
கடந்த (2012) வருடமும் ஐயன்கேணி தமிழ் வித்தியாலயம் 15 வயதின் கீழ் ஆண்கள் ( மேசைப்பந்து),15 வயதின் கீழ் பெண்கள் ( மேசைப்பந்து) அணிகள் வெற்றி பெற்று மாகாண சம்பியன்களாக கிண்ணத்தை சுவீகரித்துத் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயங்கேணி தமிழ் வித்தியாலயத்தின் மாணவர்களை மிக நுணுகிய உத்திகளை கற்றுக் கொடுத்து கடினப்பயிற்சிகளை வழங்கி இலகுவாக வெற்றி பெறச்செய்தவர் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஸ்ரீமுருகன் என்பது குறிப்பிடத்தக்கது.