தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் உள்ள அனைத்து தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (9) விசேட பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த விசேட கோரிக்கைக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்கள் இது தொடர்பான அறிவுறுத்தல்களை மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கியுள்ளனர்.
எவ்வாறாயினும், திங்கட்கிழமை வழங்கப்பட்ட இந்த விசேட விடுமுறைக்கு ஈடுகட்டும் வகையில், எதிர்வரும் சனிக்கிழமை (14) வழமை போன்ற கல்விச் செயற்பாடுகள் குறித்த தமிழ் மொழி மூலப் பாடசாலைகளில் நடைபெறும் என உரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
