மட்டக்களப்பு, ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியைச் சேர்ந்த தமிழ்த் தேசியப் பற்றாளரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகாலச் செயற்பாட்டாளருமான அமரர் சீனித்தம்பி தெய்வநாயகம் அவர்களின் பூதவுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தி இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஏறாவூர் ஐந்தாம் குறிச்சியை சேர்ந்த எழுத்தாளரும், இந்து சமய சாஸ்திர வித்தகர் எனப் பலராலும் போற்றப்படும் இந்து கலாசாரத் திணைக்களத்தின் முன்னாள் உதவிப் பணிப்பாளராக இருந்து பல சமயப் பணிகளை செய்ததோடு இந்து சமய சாஸ்திர ஜாதகங்களை மிகவும் துள்ளியமாக கணிக்க கூடியவராகவும், ஜாதக பலன்களை பத்திரிகைகளில் எழுதுவது உட்பட தமிழ் உணர்வோடு தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகளிலும் ஒன்றிணைந்து செயற்பட்ட பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருந்த அமரர் சீனித்தம்பி தெய்வநாயகம் அவர்கள் இறுவரை தமிழ்த் தேசிய உணர்வுடனும் தமிழ் மொழிஇ இலக்கியம் மற்றும் இந்து சமயப் பண்பாட்டின் மீதான பற்றுடனும் வாழ்ந்தவர்.
அவருக்கான இறுதி அஞ்சலி நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இணைந்து தமிழரசுக் கட்சியின் கோடி போர்த்தப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் கட்சியின் முக்கியஸ்தருமான துரைராஜசிங்கம், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான செ. நிலாந்தன், ஏறாவூர் நகர சபை உறுப்பினர் ரகுவரன், ஏறாவூர் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் சுதாகரன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
அத்துடன், ஏறாவூர் ஐந்தாம் குறிச்சி மதுமலர்க்கா வீரபத்திரர் சுவாமி ஆலய நிர்வாகத்தினரும் இணைந்து அமரரின் பூதவுடலுக்குத் தமிழரசுக் கட்சியின் கொடியைப் போர்த்தி, அகவணக்கம் செலுத்தி இறுதி அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் தேசியப் பற்றுடனும், இலக்கியம், இந்து சமய மற்றும் சமூகப் பணிகளிலும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த அமரர் சீனித்தம்பி தெய்வநாயகம் அவர்களின் மறைவு ஏறாவூர் மக்கள் மத்தியில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.


.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
