கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதியில் தேங்காய் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து!


கொழும்பில் இருந்து கட்டுநாயக்க நோக்கி அதிவேக வீதியில்  தேங்காய் ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறி ஒன்று, ஜா-எல பரிமாற்றப் பகுதிக்கு அருகில் இன்று திங்கட்கிழமை (02) கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த  விபத்துத் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.