முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

களுவாஞ்சிகுடி நீதிமன்ற முன்னாள் நீதிபதிக்கு பிணை


விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார் பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று(13) அனுமதியளித்தது.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நடைபெற்ற களஞ்சிய அறையில் கையாடல் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் ஆஜரான நீதிபதி ரஞ்சித்குமார் கடந்த ஏப்ரல் மாதம் விளக்கமறியில் வைக்கப்பட்டார்.

இவர் களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றில் பிணைகோரி பிணை விண்ணப்பம் செய்திருந்த நிலையில் அவரது பிiணை விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த நிராகரிப்பு கட்டளைக்கு எதிராக மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை விசாரணை செய்த மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் அவரை ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப்பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

முன்னாள் நீதிபதியின் சார்பில் சட்டத்தரணி ஜெகனின் அறிவுறுத்தலுக்கு அமைவாக சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத் ஆஜராகியிருந்தார்.

களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தில் நடைபெற்ற களஞ்சிய அறையில் கையாடல் தொடர்பில் பொதுச்சொத்துகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் நீதிவான் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.