முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

துப்பாக்கிசூட்டு வழக்கு மண்முனை தென் எருவில் பற்று பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் விடுதலை


2015ம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் வு56 தன்னியக்க துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த எதிரி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றினால் குறித்த வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015ம் ஆண்டு மண்டூரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் முன்னாள் மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான ஓந்தாச்சிமடத்தைச் சேர்ந்த காசி சேனாதிராஜா என்பவர் கடந்த 2015 ஜீன் மாதமளவில் கைது செய்யப்பட்டு பின்னர் அடையாள அணிவகுப்பு இடம்பெற்று உறுதிப்படுத்தப்படாத நிலையிலும் கல்லடி பிரதேசத்தில் வு56 தன்னியக்க துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை உடைமையில் வைத்திருந்தமை என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து எதிரி 2016ம் ஆண்டு வரையில் பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபரின் அறிக்கையின் பிரகாரம் பிணை வழங்கப்பட்டு கல்முனை மேல் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கு சுடுபடைக்கல கட்டளைச்சட்டத்தின் கீழும் வெடி பொருள் சட்டத்தின் கீழும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து 2017ம் ஆண்டு வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு வழக்கு தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.ஜே.பிரபாகரன் அவர்களினால் குறித்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இவ்வழக்கில் எதிரியான காசி சேனாதிராஜா சார்பில் சட்டத்தரணி மகேஸ்வரன் பிரகாஷ் மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

குறித்த தீர்ப்பின் பிரகாரம் வழக்கின் எதிரியான முன்னாள் பிரதேசசபை உறுப்பினரான காசி சேனாதிராஜா அவர்கள் குறித்த வழக்கில் இருந்து முற்றாக விடுவித்து விடுதலை செய்யப்பட்டிருந்தார்.