கொழும்பு கோட்டை - மருதானை ரயில் சமிக்ஞைக் கோளாறு: ரயில் சேவைகள் தாமதம்!


கொழும்பு கோட்டை  மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சமிக்ஞை அமைப்பில் (Signalling System) ஏற்பட்டுள்ள தொழிநுட்பக் கோளாறு காரணமாக, அவ்வழியாகச் செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் தாமதத்துடன் இயங்கி வருகின்றன.

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இடையிலான பிரதான ரயில் பாதை உட்பட அனைத்துப் பாதைகளும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன.

கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையே பயணிக்கும் அனைத்து தொடருந்துகளும் தாமதமடைந்துள்ளதுடன், பயணிகள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.