முக்கியச் செய்திகள்

recent | ticker | 10

ஊடகப் பணிக்காக ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ பெற்றார் செல்வி வினாயகமூர்த்தி


ஸ்ரீலங்கா ஐக்கிய காங்கிரஸின் ஏற்பாட்டில், 25 வருட ஊடகப் பாரம்பரியத்தைக் கொண்ட ‘தினச்சுடர்’ பத்திரிகையின் ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ வழங்கும் விழா நேற்று (21) சனிக்கிழமை மாளிகைக்காடு பாவா றோயல் மண்டபத்தில் (Bawa Royale Hall) வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கலாபூஷணம் கலாநிதி முபாரக் மஜீத் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் உள்ளிட்ட அதிதிகளின் கரங்களினால் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, பிராந்தியத்தின் முக்கிய செய்திகளையும் சமூகப் பிரச்சினைகளையும் துணிச்சலுடனும் பொறுப்புணர்வுடனும் வெளிக்கொண்டு வரும் வகையில் ஊடகப் பணியாற்றி வரும் கிழக்கு தமிழ் பெண் ஊடகவியலாளர் சங்கத்தின் செயலாளரும், அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் பேரவையின் செயலாளருமான ஊடகவியலாளர் செல்வி வினாயகமூர்த்தி, அவரது ஊடகப் பணிகள் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டி ‘தினச்சுடர் தேசிய விருது – 2026’ மற்றும் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

2004ஆம் ஆண்டு முதல் கலை, இலக்கியம், ஊடகம் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வழங்கிவரும் ஆளுமைகளை அடையாளம் கண்டு கௌரவிக்கும் நோக்கில் தினச்சுடர் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், இம்முறை மூன்றாம் கட்டமாக நடைபெற்ற இவ்விருது வழங்கும் விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 54 ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.