பேத்தாழை பாலீஸ்வரர் ஆலயத்தினால் ஆசிரியர் கெளரவிப்பு.


"சமயமும் சமூகமும் வளர்ப்போம்" எனும் தொனிப்பொருளுக்கமைய ஆலய தலைவர் கி.கெங்கேஸ்வரன் அவர்களின் பிரதான அனுசரனையில் ஆலய நிருவாக சபையினரின் ஏற்பாட்டில் ஆசிரியர் கெளரவிப்பு .

மட்/ககு/பேத்தாழை விபுலானந்நா கல்லூரி பாடசாலையின் ஆசிரியர் தின விழாவினை முன்னிட்டு எமது ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை கூட்டுப்பிராத்தனைக்காக வருகை தரும் இப் பாடசாலை மாணவர்களின் கல்வியினை மேம்படுத்தும் வகையில்  ஆசிரியர்களினை கெளரவிக்கும் முகமாக பாடசாலையின் 48 ஆசிரியர்களுக்கான நினைவுச்சின்ன பரிசுப்பொதிகள் இன்றைய தினம் மாணவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.