60kg கிலோ எடைப்பிரிவு குமித்தே போட்டியில் தங்கப் பதக்கம் வென்று கிழக்கு மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்.
50ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட 2026ஆம் ஆண்டுக்கான தேசிய மட்ட கராத்தே போட்டியில், கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற மட்டக்களப்பைச் சேர்ந்த பல்துறை விளையாட்டு வீரர் துஷ்யந்தன், 60 கிலோ எடைப்பிரிவு குமித்தே (Kumite) போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு களனி பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் ஒக்டோபர் 2, 3 மற்றும் 4ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போட்டியில், நாட்டின் ஒன்பது மாகாணங்களையும் சேர்ந்த முன்னணி கராத்தே வீரர்கள் பங்கேற்றனர்.
கடுமையான போட்டிகளுக்கு மத்தியில் தனது திறமையை சிறப்பாக வெளிப்படுத்திய துஷ்யந்தன், தொடர்ச்சியான வெற்றிகளின் மூலம் இறுதியில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டார்.
போட்டி முடிவுகள்
Uva vs Eastern — 0 : 8 , Western vs Eastern — 0 : 8 , Sabaragamuwa vs Eastern — 0 : 8 , Western vs Eastern — 2 : 4 இவ்வெற்றியின் மூலம் கிழக்கு மாகாணத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், SCKA கழகத்திற்கும் துஷ்யந்தன் பெருமை சேர்த்துள்ளார்.
இந்த வெற்றியின் பின்னணியில் மட்டக்களப்பு SCKA கழகத்தின் பிரதான பயிற்றுவிப்பாளர் Hr. சில்வா சென்சே மற்றும் பயிற்றுவிப்பாளர் ரவிமணாளன் கௌசிகன் சென்சே ஆகியோரின் பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் அர்ப்பணிப்பு முக்கிய பங்காற்றியுள்ளது.
மேலும், பயிற்றுவிப்பாளர்களின் வழிகாட்டுதலும் அவரது அயராத கடின பயிற்சி மற்றும் பல சவால்களையும் கடந்து தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து மேற்கொண்ட பயிற்சியின் பலனாகவே துஷ்யந்தனின் இந்த தேசிய மட்ட சாதனைக்கு உறுதுணையாக அமைந்துள்ளது. அத்துடன்,மண்முனை பற்று விளையாட்டு உத்தியோகத்தர் சிவகுமார் போட்டியில் பங்கேற்பதற்கான தேவையான வழிகாட்டுதல்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மண்ணிலிருந்து தேசிய விளையாட்டுத் துறையில் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களுக்கு துஷ்யந்தனின் இந்த வெற்றி ஒரு முன்னுதாரணமாகவும், புதிய நம்பிக்கையையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் சாதனையாகவும் அமைந்துள்ளது.
கிழக்கின் பெருமை, மட்டக்களப்பின் மைந்தன், தேசிய அரங்கில் தங்கப் பதக்கம் பெற்றமைக்கு துஷ்யந்தனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்!
.jpeg)


.jpeg)
.jpeg)
