அம்பாரை கல்வி வலயத்தின் திட்டமிடல் பிரிவுக்கு பொறுபாபான பிரதிக் கல்வி பணிப்பாளராக கடமையாற்றிவரும் திருமதி ஜெயந்திமாலா பிரியதர்சன் அவர்கள் கல்வி நிர்வாக சேவை தரம் ஒன்றிற்கு உயர்வு பெற்றுள்ளார்.
குறுமண்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் தனது ஆரம்பக்கல்வியை குறுமண்வெளி சிவசக்தி மகா வித்தியாலயத்தில் பயின்று உயர்தர கல்வியினை மட்டக்களப்பு வின்சன்ட் பெண்கள் பாடசாலையில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று விஞ்ஞான பட்டதாரியான இவர் கல்வி நிருவாக சேவை திறந்த போட்டி பரீட்சையில் சித்தி பெற்று கல்முனை, பட்டிருப்பு போன்ற கல்வி வலயங்களில் கல்வி அபிவிருத்தி மற்றும் கல்வி முகாமைத்துவ பிரிவுகளுக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளராக சிறப்பாக கடமையாற்றிய சிறந்த அனுபவசாலியான இவர் அவ்விடங்களில் அதிபர், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் நன்மதிப்பை பெற்ற நேர்மையான நிருவாகியாவார், மும்மொழி தேர்ச்சி பெற்ற இவர் எதிர்வரும் காலங்களில் கல்வி துறையில் கிழக்கு மாகாணத்தில் உயர் பதவிகளை வகிப்பார் என பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.
