காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு


துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த கவன்திஸ்ஸ யானை நேற்று (16) வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்கமுவ பகுதியில் வாழ்ந்து வந்த இந்த யானையின் சுகாதார நிலைமை தொடர்பாக கடந்த காலங்களில் பல்வேறு சிக்கல்கள் எழுந்திருந்தன.

முன் வலது காலில் துப்பாக்கிச் சூட்டினால் ஏற்பட்டதாகக் கூறப்படும் காயத்திற்கு கடந்த 24 ஆம் திகதி முதல் சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும், வைத்திய குழுவினரின் தொடர் முயற்சிகளையும் மீறி கவன்திஸ்ஸ யானை உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.