கிழக்கு மாகாண பேட்மிண்டன் சங்கத்தினால் (EPBA) ஏற்பாடு செய்யப்பப்பட்ட சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் சுற்றுப் போட்டி திருகோணமலையில்


கிழக்கு மாகாண பேட்மிண்டன் சங்கத்தினால் (EPBA) ஏற்பாடு செய்யப்பப்பட்ட சர்வதேச தரத்திலான பேட்மிண்டன் சுற்றுப் போட்டிகள் நேற்று (22) திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் ஆரம்பமானது.

சர்வதேச தரத்திலான திறந்த 1ம் தர போட்டிகள் 2026 போட்டிக்கான 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை திருகோணமலை மக்கேசர் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாணத்தில் முதன்முறையாக 1,000-க்கும் மேற்பட்ட தேசிய தரவரிசை வீரர்களைக் கொண்டு மிகப்பெரிய அளவில் பேட்மிட்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற உள்ளது.

இலங்கை பேட்மிட்டன் அமைப்பின் (SLB) நிலை 1 தேசிய தரவரிசைப் போட்டியாக அங்கீகரிக்கப்பட்ட இப்பேட்டிக்கு, இளையோர், திறந்த மற்றும் மூத்தோர் (Veteran) பிரிவுகளில் இருந்து மொத்தம் 1,018 பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்காக மொத்தம் ரூ. 750,000 ரொக்கப் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது.

கிழக்கு மாகாண பேட்மிட்டன் சங்கத்தின் (EPBA) ஏற்பாட்டில், போட்டி இயக்குநர் அலியார் பைசர் மற்றும் துணைப் போட்டி இயக்குநர் எஸ். ஸ்டான்லி பிரசாந்த் ஆகியோரின் தலைமையில் இத்தொடர் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் ஆரம்ப நிகழ்வுகளில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார மற்றும் திருகோணமலை மாநகர சபை முதல்வர் செல்வராசா மற்றும் பலர் பங்கேற்றிருந்தனர் .