திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் இருந்து வெருகலம் பதிக்கு வேல் நடை பஜனை ஆரம்பமாகியுள்ளது.
வெருகலம்பதி அருள் மிகு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு 24 வது வருட வேல்நடை பஜனை புதன்கிழமை (23) மாலை 4.00 மணிக்கு திருக்கோணேஸர் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி அருள் மிகு கோட்டை வாசல் பிள்ளையார் ஆலயம் அருள் மிகு பத்திரகாளி அம்பாள் ஆலயம் வரை வந்தடைத்தது.
இந்த வேல் நடை பஜனையானது 29.09.2026 செவ்வாய்க்கிழமை வெருகலம் பதி சித்திரவேலாயுதர் ஆலயத்தை சென்றடையும்.





