ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அரசாங்க அதிபருடன் சந்திப்பு!!


மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சங்கப் பிரதிநிதிகள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களை புதிய மாவட்ட செயலகத்தில் நேற்று (02) சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பணிகள் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் மாவட்டத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அவர்களின் பங்களிப்பு தொடர்பான விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் கொடுப்பனவு, இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், வெளிக்கள உத்தியோகத்தர்களின் உள்வரவு மற்றும் வெளிச்செல்லுகை தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.