திருகோணமலைமாவட்டசிறுவர்மற்றும்மகளிர்அபிவிருத்திக்குழுக்கூட்டம், மேலதிகமாவட்டஅரசாங்கஅதிபர்திருமதிஜெ.ஸ்ரீபதி (காணி) அவர்களின்தலைமையில்மாவட்டசெயலகஉபஒன்றுகூடல்மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சிறுவர்கள் மற்றும் மகளிருடன் தொடர்புடைய துறைசார் தீர்மானங்களை மேற்கொள்ளும் அரச உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பிரதேச மட்டத்தில் இனங்காணப்பட்டு கலந்துரையாடப்பட்டு, தீர்வு காணப்படாத நிலையில் மாவட்ட மட்டத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு விரிவாக ஆராயப்பட்டன.
குறிப்பாக, சிறுவர்களின் பாதுகாப்பு, பராமரிப்பு, உரிமைகள், உளசமூக நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், அவற்றுக்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான பல்வேறு தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.








