சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில், “சிலி–சிலி பைகள்” (Sili-Sili Bags) பயன்பாடு தொடர்பான ஆய்வுக்கான களத் தரவு சேகரிப்பு தொடர்பில், பிரதேச செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்டுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிப்பட்டறை நேற்று(02) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெற்ற இப்பயிற்சிப்பட்டறையில், களத் தரவு சேகரிப்பு முறைகள், ஆய்வுக்கான தகவல்களைப் பெறுதல் மற்றும் “சிலி–சிலி” பைகளின் பயன்பாடு தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் நடைமுறைகள் குறித்து சுற்றாடல் அமைச்சின் அதிகாரிகளினால் விளக்கமளிக்கப்பட்டது.
பயிற்சிப்பட்டறையின் மூலம், எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ஆய்வுக்கான தரவுகளை முறையாகவும் துல்லியமாகவும் சேகரிப்பதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.





