மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டம்!!


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கான மூன்றாம் காலாண்டிற்கான கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக்கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எஸ்.சசிகரன் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) திகதி இடம் பெற்றது.

இதன் போது மாவட்ட செயலகத்திற்கான கணக்காய்வு ஐய வினாக்கள் மற்றும் ஒதுக்கீடுகள் மற்றும் செலவினங்கள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இக்காலாண்டிற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

மேலும் 2026 ஆண்டு மாவட்ட செயலகத்தில் மேற்கொள்ளப்பட்ட செயற்றிட்டங்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக மாவட்ட செயலக கணக்காளர் ரீ.மதன் அவர்களினால் அளிக்கை செய்யப் பட்டதுடன் பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ் அவர்களினால் தெளிவூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீதாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஜீ.பிரணவன், மாவட்ட பிரதம கணக்காளர் திருமதி காயத்திரி ரமேஸ், பிரதம பொறியியலாளர் ரீ.சுமன், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் வீ.நவநீதன், மாவட்ட செயலக சமூர்த்தி பணிப்பாளர் திருமதி ஜெயானந்தி திருச்செல்வம், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கே.மதிவாணன் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.