அக்கரைப்பற்று - கல்முனை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு


நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வெவ்வேறு வீதி விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று - கல்முனை மார்க்கத்தில்  (12) சனிக்கிழமை  பாலமுனை வீதி திரும்பும் சந்தியில், கல்முனை நோக்கிச் சென்ற தனியார் பேரூந்து ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உயிரிழந்தவர் அட்டாளைச்சேனை பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.  மேலும், விபத்து தொடர்பாக பேரூந்தின்  ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.