ஊடகவியலாளர்களுக்கான வெறுப்புப்பேச்சு & AI Journalism தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை ! ! !


சர்வதோயத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுக்கான வெறுப்புப்பேச்சு & AI Journalism தொடர்பான விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை மட்டக்களப்பில் உள்ள  பல்நோக்கு கூட்டுறவு சங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்வில்  வளவாளராக சமுக வலைத்தள ஆய்வாளர்  ரவிந்திரன் விதுர்ஷன் கலந்து சிறப்பித்தார்.

நவீன இணைய உலகில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்களைக் கையாள்வதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.செயற்கை நுண்ணறிவு (AI): புதிய தொழில்நுட்பங்களை செய்தியியலில் எவ்வாறு பயன்படுத்துவது? தவறான தகவல் (Misinformation): இணையத்தில் பரவும் பொய் செய்திகளை அடையாளம் காண்பது எப்படி? வெறுப்புப் பேச்சு (Hate Speech): சமூக அமைதியைக் கெடுக்கும் வெறுப்புப் பேச்சுக்களைத் தடுத்தல். உண்மை சரிபார்ப்பு (Fact-Checking): ஒரு செய்தியின் உண்மைத்தன்மையை ஆதாரங்களுடன் உறுதிப்படுத்துவது எப்படி? மற்றும் ஊடகச் செயற்பாட்டில் வெறுப்புப்பேச்சை அடையாளம் காணுதல், பொறுப்பான செய்தியறிக்கை மற்றும்  AI கருவிகளை ஊடகவியலில் பயன்படுத்துதல் தொடர்பான முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு  விளக்கங்களும் அளிக்கப்பட்டன

இந்த விழிப்புணர்வுத் திட்டமானது, டிஜிட்டல் உலகில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட ஒரு சிறந்த வழிகாட்டியாக அமைந்தது.