சம்மாந்துறையில் போக்குவரத்து சட்டங்களை மீறியமை மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் 10 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸாரினால் திங்கட்கிழமை (31) மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டன.
மேலும், போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோர் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவோருக்கு எதிராக தொடர்ச்சியாக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சம்மாந்துறை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
