தமிழர்களின் கலைகளையும் கலாசாரங்களையும் இளம் சமூகத்திற்கு மத்தியில் கொண்டுசெல்லும் வகையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துiயினரால் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் பாரம்பரிய கூத்து அரங்க விழா நேற்று ஆரம்பமானது.
கிழக்கு பல்கலைக்கழக நுண்கலைத்துறை தலைவர் திருமதி துஸ்யந்தினி சத்தியஜித் தலைமையில் ஆரம்பமான இந்த ஆரம்ப நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைகலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.சுரேஸ் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் திருமதி புளோரன்ஸ் பாரதி கெனடி,மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கர் கி.புவனச்சந்திரா,உதவி வண்ணக்கர் உ.சுவேந்திரகுமார்,பேராசிரியர் ஜெய்சங்கர்,நுண்கலைத்துறை நிகழ்ச்சிகள்இணைப்பாளர் கலாநிதி சு.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழர்களின் பாரம்பரிய வாத்தியங்கள் கொண்ட உள்ளூர் அரங்க காட்சி கூடம் திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் நுண்கலைத்துறை மாணவர்களின் வீரபத்திரர் வசந்தன் கூத்து ஆடப்பட்டது.இன்றைய நிகழ்வுகளை கண்டுகளிப்பபதற்காக பெருமளவான மக்கள் மாமாங்கேஸ்வரர் ஆலய வளாகத்தில் கூடியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)