செர்பியா செல்கிறார் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா


அணிசேரா இயக்கத்தின் 65ஆவது ஆண்டு நிறைவு உயர்மட்ட நினைவுக்கூட்டத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்வதற்காக, வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா செர்பியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

எதிர்வரும் 30ஆம் திகதி முதல் செப்டம்பர் 2ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த விஜயத்தின்போது, இருதரப்பு உறவுகள், பொருளாதாரம் மற்றும் வர்த்தக மேம்பாடு தொடர்பில் செர்பிய வெளியுறவு அமைச்சகத்தின் மாநிலச் செயலாளர் மற்றும் வர்த்தகப் பேரவையின் உயர்மட்டப் பிரதிநிதிகளை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும், செர்பியாவில் உள்ள இலங்கைச் சமூகத்தினரையும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா சந்தித்துக் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.