அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் உள்ள பிரதான வீதியில் இன்று மாலை (02.08.2026)ஆம் திகதி திடீர் வீதி விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய ரக பட்டாரக (டீயவவய) வாகனம் ஒன்று, கல்முனை தாழவட்டுவான் சந்திக்கு அருகாமையில் பயணித்தபோது திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த அவ்வாகனம் வீதியோரத்தில் அமைந்திருந்த அபிவிருத்தி லொத்தர் விற்பனை நிலையத்திற்குள் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்தக் கொடூர விபத்தில் லொத்தர் விற்பனை நிலையத்தின் தூண்கள் பலத்த சேதமடைந்து கடை தரைமட்டமாகியுள்ளதுடன், தலைகீழாகப் புரண்டுள்ளது.
இவ்விபத்தின் போது பட்டாரக வாகனத்தின் சாரதியும், லொத்தர் விற்பனை செய்யும் கடையில் இருந்தவரும் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அப்பகுதி மக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக அருகில் உள்ள கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

