திருகோணமலை மாவட்டம், மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர் (59ஆம் கட்டை) பகுதியில் இன்று (02) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மூதூர் – கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (வயது21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (வயது ) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவரும், மற்றொருவர் பிரான்ஸ் செல்லத் தயாராக இருந்த இளைஞரும் என தெரிவிக்கப்படுகிறது.




