பல ஆண்டுகளாக தற்காலிக சேவை; கால்நடை தடுப்பூசி ஊழியர்களுக்கு நிரந்தரம் எப்போது?- சாணக்கியன் சபையில்கேள்வி


கிழக்கு மாகாண கால்நடை சேவையில் நிலவும் வெற்றிடங்கள் குறித்து கிழக்கு மாகாணத்தில் கால்நடை மருத்துவ சேவைகளின் தொடர்ச்சியையும், குறிப்பாக நீர் வெறுப்பு (Rabies) நோய் தடுப்பு நடவடிக்கைகளின் செயல்திறனையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரிடம் இன்று பாராளுமன்றத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம்  சபையில் கேள்வியெழுப்பினார்.

அங்கு அவர் மேலும் கேள்வியெழுப்பினார்.

குறிப்பாக, கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் தற்போது பணியாற்றும் கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

மாகாணத்தின் தேவையை முழுமையாகப் பூர்த்தி செய்ய, மொத்தமாக எத்தனை கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்கள் தேவைப்படுகின்றனர்?

2018 ஆம் ஆண்டு நீர் வெறுப்பு நோய் கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் தற்காலிக அடிப்படையில் நீர் வெறுப்பு நோய் ஒழிப்பு உதவியாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களில், 2019 ஆம் ஆண்டு கால்நடை தடுப்பூசி ஏற்றுபவர்களாக தற்காலிக அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களின் எண்ணிக்கை எவ்வளவு?

இவ்வாறு தற்காலிக அடிப்படையில் பல ஆண்டுகளாக சேவையாற்றி வரும் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் திகதி எது? என்பதையும் நான் அமைச்சரிடம் விளக்கம் கோரினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பல ஆண்டுகளாக அரசின் சேவையை முன்னெடுத்து வரும் இந்த ஊழியர்கள் இன்னும் நிரந்தர நியமனம் இன்றி பணியாற்றுவது கவலைக்கிடமான விடயமாகும். இவர்களின் சேவையை உரிய முறையில் அங்கீகரித்து, விரைவாக நிரந்தர நியமனம் வழங்குவதோடு, கிழக்கு மாகாணத்தில் நிலவும் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் நான் வலியுறுத்தினார்.

கால்நடை மருத்துவ சேவைகள், கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கும், பொதுச் சுகாதாரப் பாதுகாப்பிற்கும், குறிப்பாக நீர் வெறுப்பு நோய் கட்டுப்பாட்டிற்கும் இன்றியமையாதவை. எனவே, இந்த விடயத்தில் அரசு தாமதமின்றி செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.