'அத்தம' தேசிய தூய்மை தின நிகழ்ச்சி"ஒற்றுமையாக ஒன்றிணைவோம் - தூய்மையான இலங்கையைக் கட்டியெழுப்புவோம்!"

நாடளாவியரீதியில்முன்னெடுக்கப்படும் "அத்தம" தேசிய தூய்மைதின நிகழ்ச்சித்திட்டத்தின் மண்முனைதென்எருவில்பற்று  பிரதேசசெயலக பிரிவின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வானது  குருக்கள்மடம்  ஐயனார்  கோயில் முன்றலில்  பிரதேசசெயலாளர்                     . உதயஸ்ரீதர்அவர்களின்தலைமையில்காலை 8 மணியளவில்இடம்பெற்றது.

'கிளீன் ஸ்ரீலங்கா ' தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் "தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி" எனும் தொனிப் பொருளை முன்னிறுத்தி தன்னார்வ மக்கள் பங்கேற்பின் முலம் தனியார் மற்றும் மக்கள் கூட்டாண்மை எண்ணர்கருவின் அடிப்படையில் 'அத்தம' தேசிய தூய்மை தின நிகழ்ச்சி திட்டமானது நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது குருக்கள்மடம் ஐயனார் கோயிலில் இருந்து செட்டிபாளையம் வரையிலான பிரதான வீதியைத் துப்பரவு செய்யும் நிகழ்வு இடம் பெற்றது.

இவ் தேசிய நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் செ. பிரபாகரன், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த தேசிய வேலைத்திட்டமானது மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக பிரிவின் 45 கிராம சேவகர் பிரிவுகளிலும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது