மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி சாரணிய விருது பெற்றவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் சின்னம் சூட்டும் நிகழ்வும் இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் நடைபெற்றது.
சாரணர்களின் சேவை, தலைமைத்துவம் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டு வருகின்றது. இதன்கீழ் மட்டக்களப்பில் 14 சாரணியர்கள் இந்த ஜனாதிபதி விருதினைப்பெற்றுள்ளனர்.அவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சாரணிய ஆணையாளர் நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார்,இலங்கை சாரணர் சங்கத் தலைமையக ஆணையாளர் பி.சசிகுமார் மற்றும் வலய பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,சாரணிய தலைவைர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஜனாதிபதி விருதிகளைப்பெற்ற மாணவர்களுக்கு சின்னங்கள் சூட்டப்பட்டதுடன் அவர்களை கௌரவிக்கும் வகையிலான நினைவுக்கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டன.அத்துடன் சாரணிய துறைக்கு அர்ப்பணிப்புமிக்க சேவையாற்றியவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.