மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் வாக்குமூலங்கள் பதிவு


மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளரிடம் மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத்துறையினரினால் சுமார் 03மணி நேரம் வாக்குமூலங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன . சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறும் குறித்த புதைகுழி தொடர்பில் முகாம் அமைந்துள்ள பகுதியில் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறும் கடந்த ஆண்டு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து குழந்தை வடிவேல் முறைப்பாடு ஒன்றினை பதிவுசெய்திருந்தார்.

இதனடிப்படையில் குறித்த முறைப்பாடு தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்கு கடந்த 14ஆம் திகதி குற்றப்புலனாய்வுத்துறைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழு ஊடாக தன்னால் பாதுகாப்பு காரணங்களினால் அங்கு வரமுடியாது என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பில் இன்றைய தினம் குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்குமூலம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினரும் சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு உறுப்பினர் தயாளகௌரி,சிவில் சிவில் சமூக செயற்பாட்டாளர் கண்டுமணி லவகுகராசா,மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன்,மாநகரசபையின் பிரதி முதல்வர் வை.தினேஸ்குமார் ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.

வாக்குமூலம் வழங்கிய பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் இது தொடர்பான ஊடக சந்திப்பும் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டாளர் வைரமுத்து குழந்தை வடிவேல்சத்துருகொண்டான் படுகொலை சம்பந்தமாக கடந்த வருடம் 9-9-2025 ஆம் ஆண்டு இந்த விசாரணை கண்டு பொக்கவில் போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டு, அதன் பிற்பாடு கொழும்பு நாலாமாடிக்கு என்னை அழைத்தார்கள். அதாவது 14-8-2026 கொழும்பு நாலாமாடிக்கு அழைக்கப்பட்டு, பின் நான் பாதுகாப்பு பிரச்சினை காரணமாக நான் கொழும்புக்கு செல்லவில்லை.

எனவே, இவற்றை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் போய் முறையிட்டு, இந்த விசாரணையை மட்டக்களப்பு தலைமை காரியாலயத்துக்கு மாற்றித் தருமாறு CIDக்கு மாற்றித் தருமாறு கேட்டுக்கொண்டதுக்கு இணங்க, 20-8-2026 ஆம் ஆண்டு விசாரணை கொழும்பிலிருந்து வந்த குற்றப்புலனாய்வுத்துறையினரால் வாக்கு மூலம் என்னிடத்தில் பதிவு செய்யப்பட்டது.

காலை 10 மணிக்கு சென்று மூன்றரை மணித்தியாலம் நான் வாக்கு மூலத்தை கொடுத்துள்ளேன். இந்த வாக்கு மூலத்தில் அனைத்து விசாரணைகள் சம்பந்தமாகவும் தெளிவாக வாக்கு மூலம் கொடுத்துள்ளேன். மேற்படி சந்திரிக்கா அம்மையார் ஆணைக்குழுவிலுக்கு இணங்க, ஓய்வுபெற்ற நீதிபதி பாலக்கிருஷ்ணர் அவர்களின் தலைமையில் ஒரு விசாரணை ஆணைக்குழு ஒன்று நடைபெற்றது. இந்த ஆணைக்குழுவில் இந்த கொலைக்கான சூத்திரதாரிகள் சத்துருகொண்டான் போஸ்டவுன் முகாமில் இருந்த இராணுவ கேப்டன் மூன்று பேரே இதற்கான சூத்திரதாரிகள் என்று ஆணைக்குழுவால் அடையாளம் காணப்பட்டது.

அடையாளம் காணப்பட்டும் இதுவரைக்கும் அதற்கான நீதியோ, விசாரணைகளோ, அகழ்வுகளோ இடம்பெறவில்லை. இதன் காரணமாகவே கடந்த வருடம் இவற்றை துரிதமாக விசாரணை செய்ய வேண்டும் என்று ஒரு முறைப்பாடு பொக்கவில் போலீஸ் கொடுக்கப்பட்டு, பின் அம்முறைப்பாட்டுக்கு விளக்கத்தை இன்று கொடுத்துள்ளேன்.

எனவே, இந்த விசாரணையை கடந்த காலங்களில் ஏன் கொடுக்கவில்லை என்ற கேள்வி ஒன்று குற்றப்புலனாய்வுத்துறையினால் வினவப்பட்டது. கடந்த காலத்தில் இவ்வாறான ஒரு பாதுகாப்பு சிக்கல் இருந்தபடியால் எங்களுக்கு அந்த அரசாங்கத்தில் நம்பிக்கை இல்லாத என்றபடியால், தற்போது இந்த அரசாங்கத்தில் ஓரளவு நம்பிக்கை இருக்கிறபடியால்தான் இந்த விசாரணை கோரிக்கையினை முன்னெடுத்தோம்.

இந்த விசாரணையில் இந்த படுகொலைக்கு விரைவான ஒரு தீர்வைத் தர வேண்டும் என்றும், இதை சத்துருகொண்டான் போஸ்டவுன் முகாமை அகழ்வு பணிக்கு இடம் பெற வேண்டும் என்றும் மிகவும் ஆணித்தரமாக கேட்டுக்கொண்டேன்.