மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமாகிய-ஓவியத் திருவிழா

 

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்துடன் இணைந்து நடத்தும் 'ஓவியத் திருவிழாவும்  நேற்று மாலை மட்டக்களப்பில் கோலாகலமாக ஆரம்பமாகியது.

இவ்விழாவானது மட்டக்களப்பு காந்தி பூங்காவில், நேற்று ஆரம்பமாகி 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மக்கள் பார்வையிடும் வகையில் நடைபெறவுள்ளது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி மேனகா பூவிக்குமார் தலைமையில் ஆரம்பமான இந்த நிகழ்வில் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் பேராசிரியர் கெனடி பாரதி மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் கட்புல தொழில்நுட்ப துறைத்தலைவர் ஆர்.பிரகாஸ்,பேராசிரியர் சு.சீவரெத்தினம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இன்று மாலை ஆரம்பித்த இந்த ஓவியத்திருவிழான்போது மாணவர்களின் கலைக்கான போட்டி நிகழ்வுகளும் நடைபெற்றதுடன் ஓவியக்கூடங்களும் திறந்துவைக்கப்பட்டன.

இதன்போது பல்வேறு துறைகளில் தமது படைப்புகளை படைத்த ஓவியர்கள்,புகைப்படப்பிடிப்பாளர்கள் உட்பட பல்வேறு கலைஞர்களினதும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர்களினதும் படைப்புகள் கண்காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த கண்காட்சியினை பெருமளவான மக்கள் கண்டுகளித்தமை குறிப்பிடத்தக்கது.