வெப்பச் சுட்டெண் உயர்வு: 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – பலத்த காற்று, மழை மற்றும் கடல் கொந்தளிப்பு

"வெப்பச் சுட்டெண்" காரணமாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று பகல் வேளையில் மனித உடலினால் அதிகரித்த வெப்பநிலை உணரப்படும்.

 சப்ரகமுவ மாகாணத்திலும்  அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும்  பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

 மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும்,   வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 முதல் 50 கிலோமீற்றர்  வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

நீர்கொழும்பு தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர்  வேகத்தில் தென் மேற்குத் திசையில்  இருந்து காற்று வீசும்.

மன்னார் தொடக்கம் புத்தளம் ஊடாக சிலாபம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள்  கொந்தளிப்பாகக் காணப்படும். 

நாட்டைச் சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் இடைக்கிடையே காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலௌக்கூடும்.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொள்கின்றது.