மட்டக்களப்பு - கல்முனை வீதியின் சாஸ்திரியார் சந்திக்கு அருகில் நேற்று புதன்கிழமை (22) களுவாஞ்சிகுடி நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், வீதியைக் கடக்க முயன்ற மிதிவண்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் படுகாயமடைந்த மிதிவண்டி ஓட்டுநர், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணித்தவர் களுவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மாங்காடு பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மிதிவண்டி ஓட்டுநர் உயிரிழந்தார்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் களுவாஞ்சிகுடி பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
