மட்டக்களப்பில் உருவாகவுள்ள திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு

மட்டக்களப்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் “நான்கு நண்பர்கள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் முதல் திரைப்படமான ‘PROJECT 1 (S1)’ இன்று அதிகாரப்பூர்வமாக தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது.

இயக்குநர் Y. சுஜீதன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படத்தின் ஆரம்ப பூஜை நிகழ்வு குரு மண்வெளி ஸ்ரீ நாகதம்பிரான் மற்றும் ஸ்ரீ மகாவிஷ்ணு ஆலயத்தில் ஆன்மிக நிகழ்வுகளுடன் நடைபெற்றது. பூஜையைத் தொடர்ந்து படப்பிடிப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திரைப்படத்தின் ஆரம்ப விழாவில் மட்டக்களப்பு திரைப்பட உலகைச் சேர்ந்த இயக்குநர்கள் முரளிதரன், தேவா அலோசியஸ், கோடீஸ்வரன் உள்ளிட்ட பல முக்கிய கலைஞர்கள் திரையுலக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு படக்குழுவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

புதிய முயற்சியுடன் களமிறங்கியுள்ள “நான்கு நண்பர்கள் பிலிம்ஸ்” நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘‘PROJECT 1 (S1)திரைப்படம் குறித்து மேலும் பல அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.