ஐக்கிய தேசியக் கட்சி என்பது இந்த நாட்டைச் சீரழித்த ஒரு கட்சியாக இருக்கின்றது. அந்தக் கட்சியிலிருந்து வந்தவர்கள் எப்பவுமே இந்த நாட்டைச் சீரழித்தவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள். அவர்களோடு ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என சஜித் பிரேமதாச அவர்கள் நினைத்துக்கொண்டால் அது ஒரு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
யூலை கலவரம்,யாழ்நூலகம் எரிப்பு போன்ற விடயங்களில் பின்புலமாக இருந்து செயற்பட்டவரே இந்த ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
இதிலே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுடன் ஒன்றிணைந்து ரணில் விக்ரமசிங்க, அதனைப் போன்று உதயன் கம்மன்பில, அதனைப் போன்று சம்பிக்க ரணவக உட்பட விசேடமாகக் குறிப்பிட வேண்டும் என்றால் கடந்த காலங்களில் இனவாத ரீதியாக செயல்பட்டவர்கள், இனவாத ரீதியாக இந்த கட்சியை உருவாக்கிக் கொண்டிருந்தவர்கள், இனவாதத்தை பிரதானமாக வைத்துத் தங்களது வாக்கு வங்கிகளைச் சேகரித்துக் கொண்டவர்கள் இன்று சஜித் பிரேமதாசாவுடன் இணைந்திருக்கின்றார்கள்.
கடந்த காலங்களிலே ஜனாதிபதி தேர்தலிலே சஜித் பிரேமதாச சிறுபான்மைக் கட்சிகளுக்கும் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனத்தவர்களுக்கு அவர் குறிப்பிட்டிருந்தார் தான் ஒரு இனவாதி இல்லை என்பதையும், தான் ஒரு சிறந்த தலைவராக இந்த நாட்டை அனைத்து இன மக்களையும் ஒன்றாக அரவணைத்துக் கொண்டு செல்லப் போவதாக அவர் அந்த காலங்களிலே குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதன் பின்னர் இப்போது அவர் இணைந்திருக்கின்ற கட்சிகளையும், அதன் தலைமைப் பீடங்களையும் நாங்கள் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இனவாதத்தை மாத்திரம் முதலீடாக வைத்து அரசியல் செய்துகொண்டிருந்தவர்களில்தான் இப்போது அவர் இணைத்திருக்கின்றார்.
ரணில் விக்ரமசிங்க கடந்த காலங்களிலே இந்த நாட்டை இரண்டாகப் பிளக்கக்கூடிய பல சந்தர்ப்பங்களிலே அவர் தலைமையேற்று இந்த நாட்டைச் சீரழித்தவர். அவர் தொடர்பாக பலவிதமான கருத்துக்கள் இந்த நாட்டிலே இருக்கின்றது.
உங்களுக்குத் தெரியும்இ ஜூலை கலவரம் தொடர்பாகஇ அந்த ஜூலை கலவரத்தின் காலத்திலும் கூட அவர் பின்னிருந்து உழைத்தவராக இருந்தவர் அவர். இந்த யாழ் நூலகம் எரிப்பு தொடர்பான விடயங்களிலும் அவரே பின்னிருந்து செயல்பட்டிருந்தார்.
ஆகவே ஐக்கிய தேசியக் கட்சி என்பது இந்த நாட்டைச் சீரழித்த ஒரு கட்சியாக இருக்கின்றது. அந்தக் கட்சியிலிருந்து வந்தவர்கள் எப்பவுமே இந்த நாட்டைச் சீரழித்தவர்களாகத்தான் இருக்கப் போகின்றார்கள். அவர்களோடு ஒன்றிணைந்து இந்த நாட்டை முன்னேற்ற முடியும் என சஜித் பிரேமதாச அவர்கள் நினைத்துக்கொண்டால் அது ஒரு முட்டாள்தனமாகத்தான் இருக்கும்.
தொடர்ச்சியாக அவர்களின் இணைப்பு எப்பவுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கோ அல்லது இந்த கட்சிக்கோ எதிராக மக்கள் திரும்ப மாட்டார்கள் என்பதிலே நாங்கள் குறியாக இருக்கின்றோம். அந்த நம்பிக்கை எப்போதுமே எங்களுக்கு இருக்கின்றது.
காரணம், மக்கள் சரியான ஒரு தீர்ப்பை அவர்கள் வழங்கி இருக்கின்றார்கள். கடந்த காலங்களில் ഇവர்களைத் தோற்கடித்திருந்தார்கள். இன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த நாட்டைப் பொறுப்பேற்றதன் பின்னர் அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் அவர்கள் நம்பிக்கையோடு பயணிக்கக்கூடியஇ அதேநேரம் அவர்கள் ஆதரவாக இந்த அரசாங்கத்தில் செயல்படுவதையும் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
ஆகவே எப்பவுமே தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்கள் நலன் விரும்பும் அரசாங்கம் என்பதை நிரூபித்துக் காட்டிக்கொண்டிருக்கின்றது.
