கறுப்பு நிறமாக மாறிவரும்-சிறுபோக வேளாண்மை நெற்கதிர்கள்

வாழைச்சேனை கமநல சேவை அலுவலக பிரிவில் உள்ள முள்ளிவட்டுவான் விவசாய கண்டத்தில் வயல்களில் புதுவகையான நோய் பரவுவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுபோக வேளாண்மை செய்து அறுவடைக்கான காலம் நெருங்கிக்கொண்டு இருக்கும் இச் சந்தர்ப்பத்தில் வயல்களில் உள்ள நெற்கதிர்கள் கறுப்பு நிறமாக மாறிவருவதுடன் அதில் நெல் இல்லாமல் அது பதராக காணப்படுவதாகவும் கவலைப்படுகின்றனர்.

இது தொடர்பாக வாழைச்சேனை கமநல சேவை காரியாலயத்தில் உள்ள விவசாய போதனாசிரியரிடம்  முறையிட்டும் அது என்னவகையான நோய் என்று அறியமுடியாமல் உள்ளதாகவும் சில வேளை காலநிலையில் உள்ள வெப்பம் ஒரு காரணமாக இருக்கலாம் என்றும்  அதனுடன் பங்கசு தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் தெரிவித்ததாக விவசாயி தெரிவித்தார்.

எங்களின் பிரதான தொழிலே இந்த விவசாயம்தான் ஒரு பக்கம் யானையின் தொல்லை மறு புறம் இவ்வாறான நோய்களின் தாக்கம் நெல்லுக்கும் விலை இல்லை என்றால் விவசாயிகளான எங்களது நிலை யாரிடம் போய் சொல்வது  என்று விவசாயி எம்.ஏ. முஹைதீன்  தெரிவித்தார்.