2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் ஜனவரியில் சமர்ப்பிப்பு

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத் திட்ட உரை) 2026.01.12 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

நிதி அமைச்சின் கூற்றுப்படிஇ ஒதுக்கீட்டுச் சட்டமூலம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் முதலாம் வாசிப்பை 2026 ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சிற்குமான செலவின மதிப்பீடுகளை உள்ளடக்கிய 2027 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூல வரைவு, 2026 செப்டம்பர் 14 ஆம் திகதி அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி முதல் நவம்பர் 20 வரை நடைபெறவுள்ளதுடன், குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 21 முதல் டிசம்பர் 14 ஆம் திகதிவரை நடத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது.