16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவதை தடை செய்வது தொடர்பில் அவதானம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து சிறுவர் மற்றும் மகளிர் விவகாரங்கள் அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இது தொடர்பான முன்மொழிவு குறித்து 'தேசிய சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சங்கம்' (National Childcare and Protection Society) தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்

இன்று (08) புதன்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இதனை தெரிவித்தார்.

 அரசாங்கமும் 'வேர்ல்ட் விஷன்' (World Vision) அமைப்பும் இது தொடர்பான ஒரு திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.