டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரிப்பு

இவ்வருடத்தின் இது வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதோடு, டெங்கு நோயினால் 63,835 பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவின் வைத்தியர் கபில கண்ணங்கர தெரிவித்துள்ளார்.

இவர்களில் இம்மாதத்தில் மாத்திரம் 8,450 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன்,  விசேட டெங்கு நோய் கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அடுத்த சில நாட்களிலும் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.