மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தற் கோரி பாடசாலை கதவினை மூடி பெற்றோர் மற்றும் மாணவர்களும் சேர்ந்து பாடசாலை முன்பாகவே ஆர்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இன்று காலை பாடசாலையின் முன் வாயிலை மூடி மாணவர்கள் பாடசாலைக்குள் செல்லாமல் அதிபரின் இடமாற்றத்தை ரத்தது செய்ய கோரி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் கலந்து கொண்டதில் குறித்த அதிபர் சிறந்த முறையில் செயற்பட்டு வரும் போது அதிபர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பல்வேறு கோர்சங்களை இட்டனர்.
சிரான ஆசிரியர்களை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் கல்வி திணைக்களத்திற்கு தெரிவித்த போது எந்தவித நடவடிக்கைளும் எடுக்க வில்லை ஆனால் அதிபர் மீது குற்றச்சாட்டு வந்தபோது விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளிர்கள் பாடசாலை நல்ல நிலைமைக்கு திரும்பியுள்ளதே இந்த அதிபரினாலேதான் ஆகவே அதிபரின் இடமாற்றத்தை ரத்தது செய்யும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


.jpeg)

.jpeg)


.jpeg)
.jpeg)


.jpeg)