ஜனாதிபதியின் முழுநாடும் ஒன்றாக தேசிய போதையொழிப்பு வேலைத்திட்டத்திற்கு இணைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மட்டக்களப்பு,ஏறாவூர்ப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலய மாணவர்களினால் விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.
இணைந்து புகையிலை உற்பத்தி பொருட்கள் அற்ற பிரதேசம் , போதைப்பொருள் பாவனை அற்ற பிரதேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளைக்கொண்டு இந்த விழிப்புணர்வு ஊர்வலமும் நிகழ்வும் நடாத்தப்பட்டது.
பலாச்சோலை விபுலானந்தா வித்தியாலய மாணவர்கள்,உத்தியோகத்தர்கள், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த நிகழ்வினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது ஊர்வலமாக சென்ற மாணவர்கள் புகையிலைப்பொருள் பாவனையினை தடுப்போம்,சட்ட விரோத போதைப்பொருளை ஒழிப்போம்,புகைத்தலை தடுப்போம் போன்ற கோசங்களை எழுப்பிச்சென்றதை காணமுடிந்தது.



.jpeg)

