ஈழத்து சினிமாவில் புதிய புரட்சி!

மட்டக்களப்பு மண்ணிலிருந்து ஈழத்து சினிமாவில் புதிய புரட்சியை தேவா சினி புரொடக்சன் நிறுவனம் ஏற்படுத்திவருவதுடன் அதன் மூலம் பல்வேறு செயற்பாடுகளையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றது.


கடந்த வருடம் தமது 25 வது திரைப்படமாக சாவடி திரைப்படத்தை தயாரித்து, இலங்கையில் 16 திரையரங்கில் வெளியிடப்பட்டு, நூற்றுக்கும் அதிகமான விருதுகளை பெற்றுக் கொண்டு, கிழக்கு மண்ணிற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் பெருமை தேடித்தந்த முதல்  திரைப்படம் சாவடி ஆகும்.

மூன்று முக்கோண கதைகளை ஒன்றிணைத்த திரைப்படம் சாவடி துவக்கு தோட்டா என பெயர் பெற்றுள்ளது. அதன் இரண்டாவது கதையாக இவ்வாண்டு துவக்கு திரைப்படம் முறையாக திரைப்பட கூட்டுத்தாபனத்தில் பதிவு செய்யப்பட்டு, தற்போது வெளியீட்டு பணிகளுக்காக தயாராகி வருகிறது.
தமது தயாரிப்பில் ஆண்டுதோறும் புதிய முகங்களை அறிமுகம் செய்து வருவது தேவா சினி நிறுவனத்தின் விசேட அம்சமாகும்.

துவக்கு திரைப்படத்திலும் 40 புது முகங்களை அறிமுகம் செய்துள்ளார்கள். அதேவேளை இலங்கையின் தமிழ் சினிமா துறையில், பிரபல்யம் அடைந்த பல கலைஞர்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

அதேவேளை இதன் சிறப்பம்சமாக இந்திய தமிழ்த் திரைப்பட நடிகர், இந்திய தேசிய விருது பெற்ற "ஆடுகளம்" ஜெயபாலன் முக்கிய பாத்திரத்தில் நடித்திருப்பது படத்திற்கு மேலும் வலுச்சேர்த்திருக்கிறதாக, தேவா சினி நிறுவனம் கூறி இருக்கிறது.
இந்நிலையில் தேவா சினி நிறுவனம், விளையாட்டு துறைகளிலும் குறிப்பாக கிரிக்கெட் துறையிலும் தமது ஆர்வத்தை காட்டி வருவது தற்காலத்தில் கண்கூடாக தெரிகிறது.
சினிமா கலைஞர்களுக்காக, அவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக கடந்த 19.04.2026 சங்கவி ஃபிலிம்ஸ் நிறுவனம், கொழும்பில்  ஏற்பாடு செய்திருந்த கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் கலந்துகொண்டு அனைத்துப் போட்டிகளிலும் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தி, சாம்பியன் கிண்ணத்தை  சுவிகரித்து, மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த சினிமா தயாரிப்பு நிறுவனமாக தேவா சினி புரொடக்சன் திகழ்கிறது.

அதேபோன்று இம்மாதம் 06.05.2026 குவியம் மீடியா நிறுவனம் இலங்கையின் அனைத்து சினிமா கலைஞர்களையும் ஒன்று சேர்க்கும் நோக்கில், யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியிலும், மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக பங்கு பற்றி, அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இரண்டாவது(சுரnநெச ரி)கிண்ணத்தை சுவிகரித்து, சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர் போன்ற கிண்ணங்களையும் பெற்றுக் கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தேவா சினி புரெடக்சன் நிறுவனம்
மேலும் பெருமை சேர்த்திருக்கின்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக கலாச்சார அதிகார சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் மாநகர சபை வரிக்கு உட்பட்டு இயங்கும் நிறுவனம் இதுவாகும்.

இதுவரை 26 திரைப்படங்களை தயாரிப்பு செய்துள்ளார்கள். கடந்த வருடம் சாவடி திரைப்படத்தின் மூலம் உலகமெங்கும் மட்டக்களப்பின் பெருமையை கொண்டு சேர்த்து 130 சர்வதேச விருதுகளையும்,04 தேசிய ரீதியில் குவியம் விருதுகளையும் வென்று, சாதனைகளை தமதாக்கி இருக்கிறது.இதன் காரணமாக இலங்கை தேசிய திரைப்பட கூட்டுத்தாபனம் இவ்வாண்டு தேசிய விருது வழங்கல் விழாவில் "சாவடி" திரைப்படத்தை தெரிவு செய்துள்ளது இன்னும் இன்னும் மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளது.

ஆர்ப்பாட்டம் இன்றி இயங்கி வரும் Deva Cine Production  நிறுவனத்தின் உரிமையாளர் தேவ-அலோசியஸ் என்பது குறிப்பிடத்தக்கது.