மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் வண்ணக்கர் மற்றும் உதவி வண்ணக்கரை தெரிவுசெய்வதற்கான தேர்தல் (06) காலை முதல் மாலை 3.00மணி வரையில் நடைபெற்றது.
மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கர் தெரிவுசெய்வதற்கான தேர்தல் இன்று காலை இத் தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் முன்னிலையில் நடைபெற்றது.
இதனடிப்படையில் மாலை 3.00மணியளவில் வாக்குகள் எண்ணப்பட்டு பின்னர் முடிவுகள் பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.
இதனடிப்படையில் மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீ மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வண்ணக்கர் தெரிவுசெய்வதற்காக வாக்களிப்பதற்காக 1487பேர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 768 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. 39வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.729வாக்
இதனடிப்படையில் வண்ணக்கர் தேர்வுக்கான போட்டியில் நந்தி சின்னத்தில் போட்டியிட்ட தி.விக்ரமன் அவர்கள் 615வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றதாகவும் கும்பம் சின்னத்தில் போட்டியிட்ட சிவகுரு உமாகேசன் 114வாக்குகளைப்பெற்றார் தாக தேர்தலின் தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம அறிவித்தார்.
அத்துடன் உதவி வண்ணக்கர் தேர்தலில் 1487பேர் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில் 768 வாக்குகள் செலுத்தப்பட்டுள்ளன. 45வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.723வாக்
மயில் சின்னத்தில் போட்டியிட்ட உதயகுமார் சுவேந்திரகுமார் அவர்கள் 665வாக்குகளைப்பெற்றதுடன் ஓம் சின்னத்தில் போட்டியிட்ட சுகுமார் லக்ஸ்மன் அவர்கள் 158வாக்குகளைப்பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் அவர்களும் உதவி வண்ணக்கராக உதயகுமார் சுவேந்திரகுமார அவர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவத்தாட்சி அலுவலரும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளருமான திருமதி சிவப்பிரியா வில்வரெட்னம் தெரிவித்தார்.
இதேநேரம் எந்த தேர்தலும் இன்று கோட்டைமுனை ஆதிசைவ வேளாளர் குல வண்ணக்கராக கந்தலிங்கம் புவனச்சந்திரா அவர்களும் உதவி வண்ணக்கராக இராசசிங்கம் லோகேஸ்வரன் அவர்களும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளரினால் அறிவிக்கப்பட்டது.
தேர்தல் மூலம் மீண்டும் வண்ணக்கராக,உதவி வண்ணக்கராக தெரிவுசெய்யப்பட்டவர்களும் அதிசைவ வேளாள குல மக்களினால் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்ட வண்ணக்கர்மார்களும் இன்று மாலை மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வழிபாடுகளை முன்னெடுத்ததுடன் தேர்தலுக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.




.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)




.jpeg)
.jpeg)
.jpeg)