பிள்ளையான் இன்று மட்டக்களப்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
2008ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நிகழ்ந்த ஐந்து கொலைகள் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற 'பிள்ளையன்' மற்றும் பிற சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மட்;டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.
குடந்த 15ஆம் திகதி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.இதன் மூன்றாவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை அடுத்த வழக்கில் நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு விடுக்கப்பட்ட பணிப்புரையின் அடிப்படையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐந்து ஆட்கொலை தொடர்பில் சுமத்தப்பட்ட 3 குற்றச்சாட்டுகளின் அடிப்படையிலும் கல்லடியில் உள்ள காணி பிரச்சினை ஒன்று தொடர்பிலும் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தொடர்பிலேயே இன்றைய நீதிமன்ற விசாரணை நடைபெற்றன.
இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் நீதிபதி அ.தர்சினி முன்னிலையில் வழக்கு நடைபெற்றது.
இன்றைய தினம் சாட்சிகளும் நீதிமன்றில் ஆஜரான நிலையில் இது தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்பட்டதுடன் பிள்ளையான் தரப்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகளினால் பிள்ளையானை மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைப்பற்கான கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இதேபோன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட வழக்கினை சாதாரண வழக்கிற்கு மாற்றுமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், பிள்ளையானை எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.அதேபோன்று கல்லடி காணி பிணக்கு தொடர்பான வழக்கினை ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
2008 ஆம் ஆண்டில் டி-56 ரக துப்பாக்கிகளால் நிகழ்த்தப்பட்ட கொலைகள் தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடிப்படையில் குற்றப்புலனாய்வுத்துறையினரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
2008ஆம் ஆண்டு ஜனவரி 09ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள கல்லடி முருகன் கோவில் அருகே, முன்னாள் காவல்துறை அதிகாரி உட்பட இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் ,2008ஆம்ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் திகதி வவுணதீவு கொத்தியாபுல பகுதியில் இரவில் ஆயுதமேந்திய குழுவினரால் மேலும் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலான வழக்குகளில் குற்றப்புலனாய்வுத்துறையினரால் சந்திரகாந்தன் சந்தேக நபராக அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)


.jpeg)
.jpeg)
