பொசன் தினத்தினை முன்னிட்டு ஒரு இலட்சம் மரங்கள் நடும் திட்டத்திற்கு அமைவாக மரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
சிலோன் கிறீன் லைவ் பிளான்டேசன் நிறுவனத்தின் ‘ஹரிதாகமனய" என்னும் நிலமும் வளமும் நிறைந்த ஒரு பசுமையான நாட்டிற்காக ஒரு லட்சம் மரக்கன்றுகளை நாடுபூராகவும் விநியோகிக்கும் திட்டம் இன்று பொசன் தினத்தினை முன்னிட்டு ஆரம்பித்துவைக்கப்பட்டது.
சிலோன் கிறீன் லைவ் பிளான்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரான கலாநிதி மாலன் பிரான்சிஸ் பீட்டர்ஸ் அவர்களின் கருத்தாக்கத்திற்கு அமைய, இந்த நாடு தழுவிய மரக்கன்றுகள் விநியோகிக்கும் திட்டம் அனைத்து மாகாணங்களையும் மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
மட்டக்களப்பு நகரில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு சிலோன் கிறீன் லைவ் பிளான்டேசன் நிறுவனத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது பயன்தரு மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டதுடன் மரங்கள் வளர்க்கப்படுவதன் முக்கியத்தும் தொடர்பில் விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் சிலோன் கிறீன் லைவ் பிளான்டேசன் நிறுவனத்தின் வடக்கு கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் கே.பிரவீன், மட்டக்களப்பு வலய முகாமையாளர் இ.கிருஸாந்த்,கிளிநொச்சி வலய முகாமையாளர் பி.சிறிபாலன் உட்பட பிரதேச மட்ட உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.