முதலாவது உலக யோகாகாசன போட்டியில் சாதனை படைத்த மட்டக்களப்பு மாணவர்கள்


முதலாவது உலக யோகாகாசன போட்டியில் இலங்கையினை அணியினை பிரதிநிதித்துவப்படுத்திச்சென்ற மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

முதலாவது உலக யோகாகாசன போட்டியானது கடந்த ஜீன் மாதம் 4ம் திகதியில் இருந்து 8ம் திகதி வரை இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் இடம்பெற்றது.

இவ் நிகழ்விற்கு இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளனத்தினால் தேசிய அணி தேர்வு நடைபெற்றது.

இத் தேர்வில் மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை மாணவர்களாகிய துவிஷா ரமேஷ் , நிசாஹரி பிரஸ்ஸன்நாத் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டனர் . 

இவர்களுடன் சேர்த்து மற்றும் சில மாணவர்கள் வேறு பல பிரிவுகளில் தேசிய அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.

இவர்கள் யோகா ஆசிரியர் சிவசக்தி சிவபாதசுந்தரம் அவர்களின் நேரடி பயிற்றுவிப்பு மற்றும் நெறியாழ்கையின் கீழ் சர்வதேச மேடையில் போட்டியிட்டு துவிஷா ரமேஷ் 1 வெள்ளி பதக்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களையும் , நிசாஹரி பிரஸ்ஸன்நாத் 1 வெண்கல பதக்கங்களையும் வெற்றி பெற்று எமது மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை சேர்த்து தந்துள்ளனர.

இந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி நிகழ்வில் அணைத்து பிரிவுகளிளும் மொத்தமாக 72 இற்கு மேற்பட்ட நாடுகளும் 500இற்கு மேற்பட்ட போட்டியாளர்களும் பங்குபற்றியதும் குறிப்பிட்டப்பட்டது.

இவ் வாய்ப்பினை அளித்த இலங்கை யோகாசன விளையாட்டு சம்மேளன தலைவர் ராஜ்குமார் அவர்கட்கும் , யோகாசன ஆலோசகர் மதிப்பிற்குரிய  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கட்கும் , மட்டக்களப்பு சக்தி ஆனந்த யோகா பாடசாலை அதிபர்,மாணவர்களும் ஆசிரியர்களும் பெற்றோரும் நன்றிகளையும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.